சுகாதாரத்துறையில் 2000க்கும் மேற்பட்ட ஸ்டாப் நர்ஸ் பணியிடங்கள்

சுகாதாரத்துறையில் 2000க்கும் மேற்பட்ட ஸ்டாப் நர்ஸ் பணியிடங்கள்
X
தமிழக சுகாதாரத்துறையில் 2000க்கும் மேற்பட்ட ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்புற மருத்துவ நிலையங்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contractual Staff Nurse) தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி:

செவிலியர் (Staff Nurse)

இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் (Mid Level Health Provider)

மொத்த காலியிடங்கள்: 2000க்கும் மேற்பட்ட இடங்கள்

காலியிட விவரங்கள்:

நாமக்கல் DHS: 211 இடங்கள்- கடைசி தேதி: 25-01-2023

மயிலாடுதுறை DHS:103 இடங்கள்- கடைசி தேதி:27-01-2023

புதுக்கோட்டை DHS:114இடங்கள்- கடைசி தேதி: 27-01-2023

கோவை டி.எச்.எஸ் 119 இடங்கள்- கடைசி தேதி: 30-01-2023

சேலம் DHS 218 இடங்கள்- கடைசி தேதி: 30-01-2023

தஞ்சாவூர் DHS 140 இடங்கள்- கடைசி தேதி: 30-01-2023

திருப்பூர்DHS: 126 இடங்கள்- கடைசி தேதி: 30-01-2023

கிருஷ்ணகிரி DHS 172இடங்கள்- கடைசி தேதி: 31-01-2023

திருச்சி DHS: 119 இடங்கள்- கடைசி தேதி: 31-01-2023

திருவாரூர் DHS: 81 இடங்கள்- கடைசி தேதி: 31-01-2023

மதுரை DHS: 88 இடங்கள்- கடைசி தேதி: 27-01-2023

கள்ளக்குறிச்சி DHS 54 இடங்கள்- கடைசி தேதி: 25-01-2023

இராமந்தபுரம் DHS 57 இடங்கள்- கடைசி தேதி: 27-01-2023

பெரம்பலூர் DHS: 61 இடங்கள்- கடைசி தேதி: 27-01-2023

நாகப்பட்டினம் DHS 69 இடங்கள்- கடைசி தேதி: 28-01-2023

வயது வரம்பு:

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள் வரை

விதிகளின்படி வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்துடன் DGNM/ B.Sc நர்சிங்/ B.Sc நர்சிங் பெற்றிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

2. காலிப்பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.

3. மகளிர் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

4. நிருவாக காரணங்களால் இந்த அறிவிப்பை ரத்து செய்யவோ அல்லது நிறுத்திவைக்கவோ மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!