பசை தயாரிப்பிலும் பணம் பார்க்கலாம்: குறைந்த முதலீட்டில் பெரிய வருமானம்

பசை தயாரிப்பிலும் பணம் பார்க்கலாம்: குறைந்த முதலீட்டில் பெரிய வருமானம்
X
பசை தயாரிப்பிலும் பணம் பார்க்கலாம்: குறைந்த முதலீட்டில் பெரிய வருமானம் பெறுவது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

பசை தயாரிப்பிலும் பணம் பார்க்கலாம். குறைந்த முதலீட்டில் பெரிய வருமானம் பெறுவதற்கு இந்த சுயதொழில் கைகொடுக்கும்.

இன்று படித்த இளைஞர்கள் அரசு வேலை அல்லது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை தேடி அலைகிறார்கள். அப்படி அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் பலருக்கு கை கொடுக்கிறது. சிலருக்கு கை கொடுப்பதில்லை. வேலை கிடைக்கவில்லையே என்ற அச்சத்தில் சிலர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். சிலரோ வயதானாலும் பரவாயில்லை கை நிறைய சம்பளத்துடன் வேலை பெற வேண்டும் என்பதிலேயே குறியாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் குறைந்த முதலீட்டில் எவ்வளவோ தொழில்கள் செய்ய முடியும் என்பது நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. சுயதொழில் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி சுயதொழில் தொடங்கும் போது கை நிறைய வருமானம் கிடைக்கும். நாமும் சிலருக்கு வேலை கொடுக்கலாம் என்பது எதார்த்த உண்மை.

அந்த வகையில் குறைந்த முதலீட்டில் நிறைய வருமானம் கிடைக்கக்கூடிய ஒரு தொழில் பசை தயாரிப்பு. சுயதொழில் தொடங்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள் தாங்கள் தயாரிக்கப் போகும் பொருளுக்கான தேவை, தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு செயல்பட்டால் எளிதாக வெற்றி பெற முடியும் .அந்த வகையில் பல தொழில்களுக்கு மூலப் பொருளாக விளங்கும் ஒட்டும் பசை தயாரிப்பது தொடர்பாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பை மற்றும் அட்டைப்பட்டி தயாரித்தல், ஜவுளித்துறை, பட்டாசு தயாரித்தல், கலை மற்றும் அலங்கார பொருட்கள் தயாரித்தல் என பல பொருட்களின் தயாரிப்புக்கு மூலப் பொருளாக பயன்படுவது ஒட்டும் பசை.

பாரம்பரியமான காகித பசை, நீர்ப்புகா பசை, பசை பவுடர், பிசின், வெள்ளை பால் பசை, பாலிமர் கலவைகள், பி.வி.ஏ. பசை, சிலிகேட், பிசின், தச்சுப் பசை, மாவு பசை, ஸ்டார்ச் பசை, டைட்டானியம் தசை, மரப்பசை கேசின் பசை போன்ற பல வகையான பசைகள் உள்ளன. உலர்த்தும் முறை மற்றும் பொருளின் ஒட்டும் தன்மைக்கு ஏற்றவாறு இவற்றின் வகைகள் மாறுபடும். பசை தயாரிப்புக்கு மக்காச்சோளம் மரவள்ளி கிழங்கு அல்லது கோதுமை மாவை மூலப்பொருளாக பயன்படுத்தலாம். இவையே பசை தயாரிப்பின் அடிப்படை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பசையின் வகைக்கு ஏற்ப இவற்றை பயன்படுத்தலாம்.


தயாரிக்கும் பசையை மொத்தமாகவும் சில்லறையாகவும் சந்தை படுத்தலாம். தொழிற்சாலை, பெரிய கடைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் மொத்தமான ஆர்டரின் பெயரில் தயாரித்து விற்பனை செய்யலாம். நீட்ஸ் மற்றும் ஸ்டான்ட் அப் ஆகிய அரசு திட்டங்கள் மூலம் மானியம் அல்லது கடன் பெற்று பசை தயாரிப்பு தொழிலை தொடங்கலாம். ஒட்டும் பசைக்கு தேவை அதிகம் இருப்பதால் சிறிய அளவில் தயாரித்தாலும் நிறைவான வருமானம் ஈட்ட முடியும்.

வீட்டிலே வீட்டிலேயே பசை தயாரிக்கும் முறை

பி.வி.ஏ. பசை தயாரிக்க தேவையான பொருட்கள்.

கோதுமை மாவு 100 கிராம்,

தண்ணீர் 1/2 லிட்டர்,

ஜெலட்டின் 5 கிராம் கிளிசரால் 4 கிராம்

எத்தனால் 10 மில்லி கிராம்

செய்முறை

முதலில் ஜெலட்டினை திரவ நிலைக்கு கொண்டு வந்து பின்னர் நீராவியில் வேக வைக்க வேண்டும். ஜெலட்டின் முற்றிலுமாக கரைந்தவுடன் அதில் கோதுமை மாவை சிறிது சிறிதாக கொட்டி குறைவான தீயில் கட்டி இல்லாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக கட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி அதில் கிளிசரால் மற்றும் எத்தனால் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவை நன்றாக குளிர்ந்த பின்பு பசையாக பயன்படுத்தலாம்.

தயாரித்த பின்னர் பசை நீர்த்து போனால் அதன் தரத்தில் பாதிப்பு உண்டாகும். அதை தவிர்க்க ஒரு கொள்கலனில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் நீர்த்துப்போன பசை கலவையை ஊற்றி கொதி நிலைக்கு வரும் வரை சூடு செய்யலாம்.

பசை தயாரிப்புக்கு பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீடு செய்து குடும்பம் நடத்துவதற்கு தேவையான வருமானத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!