4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) தமிழ்நாடு கல்லூரிக் கல்விச் சேவையில் உதவிப் பேராசிரியர்களை நேரடி பணியமர்த்தம் செய்வதற்கான விண்ணப்பங்களின் இறுதித் தேதியை நீட்டித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் இப்போது மே 15ம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளம்: trb.tn.gov.in
இதற்கு முன்னர், விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்த இறுதித் தேதி ஏப்ரல் 29ம் தேதியாக இருந்தது.
இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப உதவும்.
TN TRB உதவிப் பேராசிரியர் பணியமர்த்தம் 2024: முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15
தேர்வு தேதி: ஆகஸ்ட் 4 (தற்காலிகம்)
நேர்முகத் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
TN TRB பணியமர்த்தம் : உதவிப் பேராசிரியர் காலியிட விவரங்கள்
தேங்கிய காலியிடங்கள்: 72
குறைபாடு காலியிடங்கள்: 4
மாற்றுத்திறனாளிகளுக்கு (செவித்திறன் குறைபாடு) தமிழ் மற்றும் கணினி பயன்பாட்டு பாடங்களை கற்பிக்க: 3
தற்போதைய காலியிடங்கள்: 3,921
பாடவாரியான காலியிடங்களின் விரிவான பட்டியல், பாட-பதிவு சார்ந்த கல்வித் தகுதிகள் மற்றும் தகுதி அளவுகோல்கள் trb.tn.gov.in இல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, அதைத் தொடர்ந்து நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வில் இரண்டு தாள்கள், 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கானது, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 'அ' பிரிவில் 50 கட்டாயக் கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். இந்தப் பிரிவில் 25 கேள்விகள் தமிழ் மொழியிலிருந்தும், 25 கேள்விகள் பொது அறிவு, குறிப்பாக நடப்பு நிகழ்வுகளிலிருந்தும் இருக்கும். 'அ' பிரிவுக்கான நேரம் ஒரு மணி.
முதல் தாளின் இரண்டாவது பிரிவு இரண்டு மணி நேரம் கொண்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட பாடங்களில் இருந்து எட்டு விளக்க வகைக் கேள்விகளில் ஐந்திற்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண்கள்.
இரண்டாவது தாளும் இரண்டு பகுதிகளைக் கொண்டது: 'அ' பிரிவில் 50 பல்வாய்ப்பு வினாக்கள் உள்ளன, ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். இதனை ஒரு மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும். 'ஆ' பிரிவில் எட்டு கேள்விகள்,10 மதிப்பெண்கள் கொண்டவை. இவற்றில் ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு இரண்டு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.
நேர்காணல் சுற்று 30 மதிப்பெண்களுக்கானது.
திறந்த-பிரிவு விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும். பிற பிரிவினருக்கு, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 30 சதவிகிதம்.
மேலும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://trb.tn.gov.in/
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu