ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மானேஜர் பணியிடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மானேஜர் பணியிடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு
X

வேலை வாய்ப்பு அளிக்க அழைப்பு (மாதிரி படம்)

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மானேஜர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள், விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

600 உதவி மானேஜர் பணியிடங்கள்

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மானேஜர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் வங்கி தொடர்பான பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1993-க்கு முன்போ 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

‘ஆன்லைன்’ தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவா். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2023. https://www.idbibank.in/ என்ற இணையதளத்தில் மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை., யில் பணி

டெல்லியில் இயங்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூனியர் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், மெஸ் ஹெல்பர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 388 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியின் தன்மைக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பணி சார்ந்த அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 10-3-2023 அன்றைய தேதிப்படி 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-3-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://www.jnu.ac.in/career என்ற இணையதளத்தில் மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது