இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய இராணுவத்தில் நடப்பு ஆண்டிற்கான அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்ப படிவங்கள் joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்த அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி சோதனைகளுக்கு அழைக்கப்படுவார்கள்.
இதுகுறித்து கர்னல் டி.பி.சிங் கடந்த மாதம் லூதியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்னிவீர் ஜெனரல் டியூட்டி காலியிடங்களுக்கு, குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பிலும், வர்த்தகர்களுக்கு, குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2024: விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்/தகவல்கள்
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ். (மெட்ரிக் சான்றிதழின்படி பின்வரும் விவரங்கள் கண்டிப்பாக நிரப்பப்பட வேண்டும்: பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், பிறந்த தேதி).
- சரியான தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி.
- தனிப்பட்ட மொபைல் எண்.
- மாநிலம், மாவட்டம் மற்றும் தாலுகா/குடியிருப்பு தொகுதி பற்றிய விவரங்கள் (JCO/OR பதிவு விண்ணப்பத்திற்கு மட்டும்).
- ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10 Kb முதல் 20 Kb வரை மற்றும் .jpg வடிவத்தில்)
- கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் (5 Kb முதல் 10 Kb வரை, .jpg வடிவத்தில்)
- 10 ஆம் வகுப்பு மற்றும் பிற உயர் கல்வித் தகுதிக்கான விரிவான மதிப்பெண் பட்டியல், விண்ணப்பித்த பிரிவின் தகுதி அளவுகோல்களின்படி விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu