/* */

12ம் வகுப்பு படித்தோறுக்கு உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

12ம் வகுப்பு படித்தோறுக்கு உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு
X

கடந்த 2021 அல்லது 2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் (HCL), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021-2022 - ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் நிறுவனத்தின் பயிற்சியோடு பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 2,000 பேருக்கு HCL Techbee "Early Career Program"க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது.

இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)-ல் மென்பொருள் உருவாக்குபவர்- Software Developer, ஆய்வாளர்- Analyst, வடிவமைப்பு பொறியாளர் - Design Engineer, தரவுப் பொறியாளர்- Data Engineer, ஆதரவு மற்றும் செயல்முறை அசோசியேட்- Support & Process Associate, சேவை டெஸ்க் மற்றும் டிபிஓ- Service Desk and DPO ஆகிய முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது.

Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/ உதவித்தொகையை பெறலாம். பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் வழங்கப்படும்.

முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்) HCL Technologies - ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினை பெற்றுத் தருகின்றது.

மேலும் பணியில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. மேலும் இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL "Techbee"திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, சென்னை , மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு (தகுதியுள்ள மாணவர்களை ) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு: சென்னை - 88079 40948, மதுரை - 9788156509, திருநெல்வேலி - 98941 52160, திருச்சி - 94441 51303, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் - 89032 45731, 98655 35909 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 29 Oct 2022 8:43 AM GMT

Related News

Latest News

 1. செங்கம்
  பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
 2. கலசப்பாக்கம்
  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
 3. நாமக்கல்
  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
 5. திருவண்ணாமலை
  டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
 6. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
 8. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 9. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை