மீன்வளத்துறையில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
பைல் படம்
பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ/வருவாய் கிராமங்களுக்கு 24 தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mithra) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology), மற்றும் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுகலை/இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry), ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்த பிரிவுகளிலும் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு/ 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சியுடன் தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
31.12.2023 அன்றைய தேதியின்படி வயது 35-க்குள் இருக்க வேண்டும் மற்றும் நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000/-வழங்கப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் 21.06.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
விண்ணப்ங்களை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77. சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை-13 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் 9384824245/ 9384824407 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu