ஏ.டி.எம். அமைத்தால் மாதம் ரூ.90 ஆயிரம் வருவாய்: வாய்ப்பு வழங்குது எஸ்.பி.ஐ.

ஏ.டி.எம். அமைத்தால் மாதம் ரூ.90 ஆயிரம் வருவாய்: வாய்ப்பு வழங்குது எஸ்.பி.ஐ.
X
SBI Job opportunity, monthly income Rs90 thousandsஏ.டி.எம். அமைத்தால் மாதம் ரூ.90 ஆயிரம் வருமானத்தை வீட்டில் இருந்த படியே பெற எஸ்.பி.ஐ. வாய்ப்பு வழங்குகிறது.

ஏ.டி.எம். அமைத்தால் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.90 ஆயிரம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பினை பாரத ஸ்டேட் வழங்குவதாக அறிவித்து உள்ளது.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsதேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகள் நிதி நிலைமை காரணமாக தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க வங்கிகளின் பல்வேறு பணிகளும் தற்போது தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புதல், அதன் பாதுகாப்பு உள்ளிட்ட பல பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsதற்போது இதன் தொடர்ச்சியாக ஏ.டி.எம். இயந்திரங்களையே அமைப்பதற்கான பணிகளும் தனியார்களிடம் வரப்போகிறது. இந்த வாய்ப்பினை அரசுடைமை வங்கிகளில் முதன்மை வங்கியான எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி வழங்க இருக்கிறது.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஏ.டி.எம்.தொடர்பான வணிகம் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இதன் மூலம் மாதந்தோறும் வீட்டில் இருந்தபடியே 45 முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என பலர் கூறிவருகின்றனர். அந்தவகையில், நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் உரிமையை வழங்கி வீட்டில் உட்கார்ந்து சம்பாதிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை மக்களுக்கு வழங்குகிறது.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஇதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆர்வம் இருந்தால், இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தேவையான ஆவணங்களை தெரிந்து கொள்ளலாம்.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம். ஃபிரான்சைஸ் சலுகை குறைந்த முதலீட்டில், உங்கள் இருப்பிடத்திலேயே இந்த தொழிலைத் தொடங்கலாம். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ. 45,000 முதல் ரூ. 90,000 வரை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த வருவாயை நாம் பெற நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 பரிவர்த்தனைகள் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் நடந்திருக்கவேண்டும்.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஇதற்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்யவேண்டும். அதில், ரூ.2 லட்சம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படும். மீதமுள்ள ரூ.3 லட்சம் செயல்பாட்டு மூலதனம் ஒப்பந்தம் முடிவதற்குள் ஏதேனும் காரணத்திற்காக ஏ.டி.எம். இயக்குவதை நிறுத்த முடிவு செய்தால், எஸ்.பி.ஐ. ரூ.1 லட்சத்தை மட்டுமே திரும்ப தரும்.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஎஸ்பிஐ ஃபிரான்சைஸ் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.8 ரொக்கமாகவும், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு 2 ரூபாயும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது, சிறு அறிக்கையைப் பெறுவது போன்றவை பணமில்லா பரிவர்த்தனைகளின் கீழ் வரும் உபயோகத்திற்கும் பணம் கிடைக்கும்.

ஏ.டி.எம்.களுக்கான வணிக இடம் 50 முதல் 80 சதுர அடி வரை இருக்க வேண்டும். உங்கள் ஏ.டி.எம். இருப்பிடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வேறு எந்த வங்கியின் ஏ.டி.எம்.களும் இருக்கக்கூடாது என்பது முக்கியமான விதிமுறையாகும்.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsவிண்ணப்பதாரர் தினமும் குறைந்தது 300 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஏ.டி.எம். பாதுகாப்பிற்கு உறுதியான கான்கிரீட் கூரை இருப்பது அவசியம். ATM V-SAT நிறுவலுக்கு அதிகாரிகள் அல்லது சமூகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம். உரிமையைப் பெறுவதற்கு கட்டாயமான KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அடையாளச் சான்றுக்கான பான், ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, மின் கட்டணம், ரேஷன் கார்டு மற்றும் முகவரிச் சான்றாக வங்கிக் கடவுச்சீட்டு, 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண், ஜி.எஸ்.டி .பதிவு மற்றும் ஜி.எஸ்.டி. எண் போன்ற ஆவணங்கள் இதில் அடங்கும். இது தவிர, கடந்த 3 ஆண்டுகளுக்கான இருப்புநிலை, லாபம் மற்றும் நஷ்டக் கணக்கு போன்ற நிதி ஆவணங்களும் தேவை, இது வணிகத்திற்கான உங்கள் நிகர மதிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம். உரிமைச் சலுகைக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். நிறுவல் கோரிக்கைகளை டாடா இண்டிகேஷ், இந்தியா ஒன் மற்றும் முத்தூட் போன்ற எஸ்.பி.ஐ. நியமித்த நிறுவனங்களால் செய்யப்படுகிறது.

SBI Job opportunity, monthly income Rs90 thousandsஏ.டி.எம். களை தனியார்கள் அமைப்பது புதிது அல்ல. ஏற்கனவே பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்த பணியை செய்து வந்தன. தற்போது அவை தனி நபர்களை தேடி வருகிறது என்பது மட்டுமே புதிய செய்தியாகும்.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!