தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
X
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET PAPER-1) பெற்றவர்களை மட்டுமே தெரிவு செய்யப்படும்.

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET PAPER-2) பெற்றவர்களில் பழங்குடியினத்தவர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பழங்குடியினர்கள் இல்லையெனில் பட்டியலினத்தவர்களும், பட்டியலினத்தவர்கள் இல்லையெனில் பட்டியல் இல்லாத இனத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

மேற்காணும் தகுதிகள் பெற்றுள்ள பணி நாடுநர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தில், தன்னார்வலர்களாகப் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அவ்வாறு இல்லையெனில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

காலிப்பணியிடங்களை மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) பெற்ற நபர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள்.

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள்ள வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லையெனில் பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கூறிய இருவரும் இல்லையெனில் அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை.

முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் விண்ணப்பதாரர்கள் 15.07.2024 வரை தங்களது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself