TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 450 பணியிடங்கள்

TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 450 பணியிடங்கள்
X
TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 450 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது விநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் வசிக்கும் மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இது போன்ற அமைப்பை நாட்டிலேயே முதன் முதலில் அமைத்த பெருமைக்குரியது தமிழ்நாடு.

இந்நிறுவனம் 33 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, முதுநிலை மண்டல மேலாளர்கள்/ மண்டல மேலாளர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. இக்கழகத்தின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நியாய விலைக்கடைகள் மற்றும் மாநிலம் முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் 7,293 நிரந்தர பணியாளர்களும், 5,111 பருவ கால பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, கழக கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் 5,199 சுமைதூக்கும் தொழிலாளர்களும், 27,845 பருவகால சுமைதூக்கும் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு 01.07.2022ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டும் கீழ்கண்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையிலும் திருத்தியமைக்கப்பட்ட வயது வரம்பிற்குட்பட்டு பட்டியல் எழுத்தர் (seasonal bill clerk), பருவகால உதவுபவர் (seasonal helper) பதவிக்கு ஆண் மற்றும் பெண்களிடமிருந்தும், மற்றும் பருவகால காவலர் (seasonal watchman) பணிக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளது.


மதுரை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 10,குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை 20 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரை விண்ணப்ப உறையிலும் மற்றும் விண்ணப்பத்திலும் தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும், ஒரு நபர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு ஒரே நபரது விண்ணப்பங்கள் வரப்பெறின் அதுமுற்றிலும் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.01.2023 (மாலை 5.00 மணிக்குள்) அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேற்காணும் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் கீழ்கண்ட விபரப்படி த.நா.நு.பொ. வா.கழகம் மண்டல அலுவலகம் மதுரையில் நடைபெறும்.


குறிப்பு:

நேர்காணல் கடித போக்குவரத்தில் ஏற்படும் காலதாமதத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் நேர்காணலில் கல்வி சான்றிதழ், ஆதார்கார்டு, ஜாதிசான்றிதழ், வாக்காளர் அடையாளஅட்டை மற்றும் இருப்பிடம் தொடர்பான அசல் சான்றிதழுடன் கலந்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!