அரசு கல்லூரிகளில் 1895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மான்யக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பித்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று (15.12.2022) உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் இன்று முதல் (15.12.2022) முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.
கவுரவ விரிவுரையாளர்: 1895 காலியிடங்கள்
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் Degree/ PG/ Ph.D / NET/SLET/SET (Relevant Discipline)
தேர்வுக் கட்டணம்:
பொது: ரூ. 200/-; SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 100/-
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்:
1. அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதியதாக நியமனம் செய்யப்படவுள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கு www.tngasa.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் என்பது தொடர்பாக முறையாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு, அச்செய்தியினை அனைத்து அரசு கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
2. பாடப்பிரிவு வாரியாக அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் விவரத்தினையும் மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
3. கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மிகாமல் அந்தந்தப் பாடப்பிரிவுகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மிகையாக இருப்பின், அப்பணியிடங்களை நிரப்பாமல் அவ்விவரத்தினை கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
4. அரசாணை (நிலை) எண்.5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021-ல் வரையறுக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி பெற்றவர்கள் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
5. தகுதியுடையவர்கள் தங்களது தங்களது பாஸ்போர்ட் அளவில் உள்ள புகைப்படத்துடன் முதுகலை / M.Phil.,/ Ph.D., பட்டம் மற்றும் முதுகலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் புகைப்பட நகல்களுடன் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
6. கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தும் போது ஏற்கனவே அரசு கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவமுள்ள பணிநாடுநர்களுக்கு அரசு கல்லூரி பணி அனுபவ அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
7. கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தலைமையிலான குழு முன் நேர்காணலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
8. கௌரவ விரிவுரையாளர்களை ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வு செய்ய சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் தலைமையில், கீழ்க்கண்ட குழு பரிசீலித்து பணியமர்த்தப்பட வேண்டும்.
i) சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்-தலைவர் ii) சார்ந்த மண்டல, மூன்று கல்லூரி முதல்வர்கள் – உறுப்பினர் iii) சார்ந்த கல்லூரியின் முதல்வர்-உறுப்பினர் (மேலே வரிசை ii-ல் குறிப்பிடாத இதர கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்படும் போது மட்டும்)
iv) பணியில் மூத்த ஆசிரியர் / முதல்வர் - உறுப்பினர் (பட்டியல் இனத்தைச் சார்ந்த இணை பேராசிரியர் நிலைக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.
9. சார்ந்த கல்லூரி அமைந்துள்ள இடத்திலிருந்து 20 அல்லது 25 கி.மீ தொலைவிற்குள் வசிக்கும் நபர்களுக்கு கௌரவ விரிவுரையாளர் பணி நியமனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 10. பணியமர்த்தப்படும் ஒவ்வொரு கௌரவ விரிவுரையாளருக்கும் தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.20,000/-க்கு மிகாமல் வழங்கப்படவேண்டும். தற்போது ECS முறையில் (மின்னணு பணப் பரிமாற்ற முறை) கௌரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படுவதால் வருவாய் வில்லை ஒட்டிய பற்றுச்சீட்டு பெறுதல் தேவையன்று. எனினும் ECS படிவத்தில் கௌரவ விரிவுரையாளரிடம் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
11. பணியமர்த்தப்படும் கௌரவ விரிவுரையாளர்களின் விபரங்களை சார்ந்த கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் முத்திரையிட்ட உறையில் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
12. பணியமர்த்தப்படும் கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நடப்பு ஆண்டின் இறுதி நாளான ஏப்ரல் 30 வரை பணியமர்த்தலாம்.
13. தற்போது பணியமர்த்தப்படும் கௌரவ விரிவுரையாளர்கள், முறையாக நியமனம் செய்யப்படும் உதவிப் உதவிப் பேராசிரியர்கள் பணியேற்கும் நாள் அன்றோ அல்லது இடமாறுதல் மூலம் அப்பணியிடம் நிரப்பப்பட்டாலோ அல்லது கல்லூரிக்கு கடைசி வேலை நாள் அன்றோ இவற்றில் எது முன்னர் நிகழ்கிறதோ அன்று பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற விவரத்தினை பணியமர்த்தப்படும் நாளன்றே கௌரவ விரிவுரையளார்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
14. தற்போது முறையான பணியமர்த்தப்படும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் பெற எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்படமாட்டாது.
15. கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்துகையில் மேற்கூறப்பட்ட நெறிமுறைகள் தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் அவர்கள் பணியமர்த்தப்பட வேண்டுமென்றும் சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கௌரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்துவதில் ஏதேனும் தவறுகள் ஏற்படின், தொடர்புடைய மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரே பொறுப்பாவார் என்பதால் கவனமுடன் பணியமர்த்துமாறு தெரிவிக்கலாகிறது.
16. நிருவாக நலன் கருதி பணியமர்த்தப்படும் கௌரவ விரிவுரையாளர்களை எதேனும் பிரச்சனை ஏற்படின் உரிய விசாரணைக்குழு பரிந்துரையின் அடிப்படையில் அவசியம் எனில் பணியிலிருந்து விடுவிக்க கல்லூரி முதல்வருக்கு / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு அதிகாரம் உண்டு.
17. கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒரு நாள் வழங்கப்படும் தற்செயல் விடுப்பினை தேவைப்படும் மாதத்தில் சேர்த்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும்.
18. துறைசார்ந்த பணிகள், பல்கலைக்கழக பணிகளுக்கு செல்லும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு அந்நாட்கள் பணியாற்றும் வருடத்திற்கு 15 நாட்களுக்கு மிகாமல் பணி நாட்களாக கருதப்பட வேண்டும். அத்தகைய பணி நாட்களை சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
19. கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் அந்தந்த மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு தவறாது பின்பற்றப்படல் வேண்டும்.
20. கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100/-ம் இதரப் பிரிவினருக்கு ரூ.200/-ம் இணையவழியில் செலுத்தப்பட வேண்டும்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 19-12-2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29-12-2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu