திருச்சி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் 10 பணியிட வேலைவாய்ப்பு

திருச்சி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் 10 பணியிட  வேலைவாய்ப்பு
X
திருச்சி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் 10 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள (Legal Aid Defense Counsel System) அலுவலகத்திற்கு துணை சட்ட ஆலோசகர்(Deputy Chief Legal Aid Defense Counsel), உதவி சட்ட ஆலோசகர்(Assistant Legal Aid Defense Counsel), உதவியாளர்(Office Assistant / Clerk) Receptionist cum Data entry Operatorமற்றும் அலுவலக உதவியாளர்(Office Peon (Munshi / Attendant) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது.

துணை சட்ட ஆலோசகர் 2 பணியிடங்கள், உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்கள் 3, உதவியாளர் பணியிடம் 2, வரவேற்பாளர் 1 அலுவலக உதவியாளர் 2 பணியிடங்கள் என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த காலிபணியிடங்கள் விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை *https://districts. ecourts.gov.in/tiruchirappalli என்ற இணைணயதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 02.09.2024 தேதி மாலை 05.00 மணிக்குள் “தலைவர் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்று சமரசதீர்வு மைய கட்டடம், திருச்சிராப்பள்ளி -620 001“ என்ற முகவரியில் அஞ்சல் அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்க வேண்டும், என முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்