ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வணிகவியல் தினம்!

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வணிகவியல் தினம்!
ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வணிகவியல் தினம்

உலக வணிகவியல் தினம் | World Business Day

ஜே. கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் - அறிக்கை

நிகழ்வின் தலைப்பு: உலக வணிகவியல் தினம்


நிகழ்விடம்: இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை, வகுப்பறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நிகழ்ச்சி நடைபெற்ற தேதி: ஆகஸ்ட் 5, 2024.

நிகழ்ச்சி நடந்த நேரம்: காலை 11.30மணி, திங்கட்கிழமை.


முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் முதல்வர் முன்னிலையில்.

வரவேற்புரை: எஸ்.தமிழ்ச்செல்வி, இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி, வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்புரை: "உலகளாவிய வணிக எல்லைகள் மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை வழிநடத்துதல்" என்னும் தலைப்பில் முனைவர்.ஜி.மோகன்ராஜ் இணைப்பேராசிரியர் மற்றும் மேலாண்மைத்துறை துறை தலைவர் ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி குமாரபாளையம்,அவர்கள் மாணவ, மாணவியர்களிடையே சிறப்புரையாற்றினார்.


பங்கு பெற்றோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கியத்துவம்: உலகமயமாக்குதல், வர்த்தகத்தின் எதிர்காலம், இணைய வர்த்தகம் ஆகியவற்றை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது பற்றி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

வளர்ச்சி இலக்கு:

இந்நிகழ்வின் வாயிலாக உலகளாவிய வணிகவியல் தினத்தில் எதிர்கால வர்த்தகத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது பற்றி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.

நன்றியுரை:

நிகழ்ச்சியின் இறுதியில் அ.சத்தியா , இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நன்றியுரை வழங்கினார்.

Next Story