ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தின விழா
National Handloom Day Celebration 2024 | நிகழ்வின் தலைப்பு : தேசிய கைத்தறி தின விழா
நிகழ்விடம் : ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செந்துராஜா கலையரங்கம்.
நிகழ்ச்சி நடக்கும் தேதி : 07.08.2024, புதன் கிழமை
நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 11.30 மணி
தலைமை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி,
கல்லூரி கல்வி புல முதன்மையர்,
ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
முன்னிலை : முனைவர் கே.பி.சிவகாமி,
கல்லூரி முதல்வர் (பொறுப்பு ),
ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
வரவேற்புரை : மு.அன்புசரவணன்,
துறைத்தலைவர்,
துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை,
ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
தலைமை உரை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி,
கல்லூரி கல்வி புல முதன்மையர்,
ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
பங்குபெற்றோர் விபரம் : துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை மாணவர்களும், பிற துறைகளை சார்ந்த முதலாமாண்டு மாணவர்களும்.
நிகழ்ச்சியின் முக்கியத்துவம் :
கைத்தறி நெசவு மற்றும் அதன் கலாச்சார முக்கியத்துவத்தின் வளமான பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்விழாவானது துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை மாணவர்களால் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட புதுமையான வடிவமைப்புகளை கொண்டு கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு காட்சி நடத்தப்பட்டது. இந்த ஆடை அலங்கார அணிவகுப்பானது மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை கொண்டு நாகரீக போக்குகளின் துடிப்பனா கட்சியை வழங்கியது.
மாணவர்களின் படைப்பாற்றல் நெசவு ஆடைகளையும் நெசவாளர்களையும் பெருமைப்படுத்தும் வண்ணம் அமைந்தது. கைத்தறி துணிகளின் பன்முகத்தன்மையை மற்றும் நேர்த்தியை எடுத்துரைக்கும் வசீகரமான ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டன, மதிப்பு மிக்க விருந்தினர்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாளும், ஆதரவாளும் நிகழ்ச்சி செழுமைப்படுத்தப்பட்டது.
நன்றியுரை :
வி. ஜனனி,
இரண்டாமாண்டு மாணவி,
துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu