திரவுபதி முர்முக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: சூடுபிடிக்கிறது குடியரசு தலைவர் தேர்தல்..!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கு பழங்குடியின பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் திரவுபதி முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, துணை ராணுவப் படையில் சுமார் 14-16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் ஒடிசாவில் ராய்ராங்பூரில் உள்ள திரவுபதி முர்மு வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதையடுத்து, குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu