"வாயை மூடு, உனக்கு நல்லதில்லை": செய்தியாளரை திட்டிய ராம்தேவ்
செய்தியாளரிடம் கோபமாக பேசும் யோகா குரு ராம்தேவ்
யோகா குரு ராம்தேவிடம், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 40 க்கும் சமையல் எரிவாயுவை ரூ. 300க்கு உறுதி செய்யும் அரசாங்கத்தை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.
ஹரியானாவின் கர்னாலில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ஒரு பத்திரிக்கையாளர் அவர் கூறிய அந்த கருத்தைப்பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராம்தேவ், "ஆம், நான் சொன்னேன், நீங்கள் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்காதீர்கள். நான் என்ன உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய ஒப்பந்ததாரரா? என கேட்டார்.
பத்திரிக்கையாளர் மீண்டும் கேள்வி கேட்டபோது, அதிர்ச்சியடைந்த ராம்தேவ், பத்திரிகையாளரை பார்த்து "நான் கருத்து தெரிவித்தேன். நீங்கள் என்ன செய்வீர்கள்)? வாயை மூடுங்கள். மீண்டும் கேட்டால், அது உங்களுக்கு நல்லது இல்லை. இப்படி பேசாதே, என கோபமாக கூறினார்.
பின்னர் ராம்தேவ் பேசுகையில், கடினமான காலங்களில் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். எரிபொருள் விலை குறைந்தால், வரி கிடைக்காது என்று அரசு கூறுகிறது. வரி கிடைக்காவிட்டால், அவர்கள் நாட்டை எப்படி நடத்துவார்கள், சம்பளம் கொடுப்பார்கள், சாலைகள் அமைப்பார்கள்? ஆம், பணவீக்கம் குறைய வேண்டும், ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை வேலை செய்கிறேன்" என்று ராம்தேவ் கூறியபோது அவரைச் சுற்றி அமர்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் கைதட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu