"அமைச்சருக்கான சலுகை எனக்கு வேண்டாங்க.." நிராகரித்தார் எடியூரப்பா

அமைச்சருக்கான சலுகை எனக்கு வேண்டாங்க.. நிராகரித்தார் எடியூரப்பா
X

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 

முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்த அமைச்சருக்கான சலுகைகள் தேவையில்லை என எடியூரப்பா நிராகரித்துள்ளார்

கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததால் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதனிடையே முதல்வர் பதவியில் இல்லாததால் எம்.எல்.ஏ.வாகவே மட்டுமே இருக்கிறார் எடியூரப்பா. இதனால் அவர் வசித்து வரும் காவிரி பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

தாம் பதவியில் இருக்கும் வரையில் அமைச்சருக்கான சலுகைகள் எடியூரப்பாவிற்கு வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். அதே பங்களாவில் எடியூரப்பா தங்கும் வகையில் அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும் என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை. அதாவது தாம் முதல்வராக பதவியில் இருக்கும் வரை எடியூரப்பாவுக்கு அமைச்சர்களுக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என அறிவித்திருந்தார் பசவராஜ். அமைச்சர்களுக்கான வாகனம், ஓட்டுநர், பங்களா ஆகியவை எடியூரப்பாவுக்கும் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் பசவராஜ்.

வேறு சில மாநிலங்களில் இத்தகைய நடைமுறைகள் இருந்திருக்கின்றன. கர்நாடகாவில் இதுதான் முதல் முறை. ஆனால் தற்போது தமக்கு அமைச்சருக்கான எந்த சலுகையும் வேண்டாம்; இது குறித்து கர்நாடகா அரசு வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுங்கள் என கடிதம் அனுப்பியுள்ளார் எடியூரப்பா.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!