குடியரசுத் தலைவர் பதவிக்கு யஷ்வந்த் சின்கா போட்டி
இந்திய ஜனாதிபதி மாளிகை.
இந்தியாவின் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ல் நடக்கிறது. ஜூலை 21 ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இம்மாதம் ஜூன் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாள். குடியரசு தலைவர் தேர்தலுக்கு தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் பெயர் அடிபட்டது.
இதற்கிடையில், குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் நிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. இதனை உறுதி செய்வது போல, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து சரத்பவார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் குடியரசு தலைவர் பதவிக்கான பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வரும் 27 ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu