உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்று சாதனை

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை  நிது கங்காஸ் தங்கம் வென்று சாதனை
X

தங்கம் வென்ற நிது கங்காஸ்.

உலக மகளிர் குத்துச்சண்டை இறுதி போட்டியில் நிது கங்காஸ் 5-0 புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார்

13-வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் 48 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிதி கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியதில் இருந்தே நிது கங்காஸ் ஆதிக்கம் செலுத்த துவங்கினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிபோட்டியில் நிது கங்காஸ் 5-0 புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார். இறுதி போட்டியில் வென்றதன் மூலம் நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் நிது கங்காஸ்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற நிது கங்காஸ் முன்னதாக இரண்டு முறை உலக யூத் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து களம் கண்ட மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட் இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார்.

Tags

Next Story
ai solutions for small business