புலிவளம் பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகப் புலி நாள்
உலகப் புலி நாள்-மாதிரி படம்
பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள்- புலிவளம் பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29 இல் கொண்டாடப்படும் நாளாகும்.
இந்நாள் 2010 இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.
இந்தியாவிற்கு வந்த கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்கார வேட்டைக்காரர்கள் முதல் முதலாக புலியுடன் மோதியது வங்கத்தில்தான். அதனால்தான் ஆங்கிலேயர்கள் இந்திய புலிகளுக்கு 'வங்கப்புலி' என்று பெயர் சூட்டினார்கள். இன்றைய நிலையில் கிழக்கு ஆசியாவில் மட்டும்தான் புலிகள் அதிகமாக இருக்கின்றன. பளபளப்பான உடல், உறுதியான மெத்தென்ற பாதங்கள், நீண்ட வெள்ளை மீசை, சொரசொரப்பான நாக்கு இவையெல்லாம் புலிக்கு உண்டு.
பார்வை திறனும், கேட்கும் திறனும் அதிகம்.மிகத் திறமையாக பதுங்கி நடக்கும் பழக்கம் உள்ளவை. தேவைப்பட்டால் மட்டுமே புலியும் மரம் ஏறும். தேவையில்லாமல் மனிதர்களையோ, விலங்குகளையோ தாக்கும் இயல்பு புலிக்கு கிடையாது.
சப்தத்தையும், வெளிச்சத்தையும் புலிகள் விரும்புவதில்லை. பிற விலங்குகள் சப்தமிட்டால் புலி அதை கேட்டு ஓடிச் செல்கிறது. பெரும்பாலும் புலி, பயந்த குரங்குகளின் சப்தத்திற்கும், புள்ளி மான்களின் நீண்ட அலறலுக்கும், காட்டு நாய்களின் குரைப்பொலிக்கும், காட்டுக்கோழி மற்றும் மயிலின் கூவலுக்கும் அஞ்சுகிறது. நெருப்பை கண்டாலும் பயப்படும்.
புலியும் உணவும்ஒரு புலி மிகக்கடுமையான பசியின் போது மற்றொரு புலியை தின்னவும் முற்படும். தன் குட்டிகளை தின்னும் பழக்கம் உள்ளதால் ஆண் புலியின் அருகிலிருந்து குட்டிகளை பெண் புலி அப்புறப்படுத்துவதுண்டு. சமய சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் மற்ற விலங்குகள் புலியின் உணவை தட்டிப் பறிப்பதுண்டு. புலியின் இரையை மற்ற விலங்குகள் தொடாது எனும் கருத்து தவறு. தான் கொன்ற இரையை மட்டுமே புலி தின்னும் என்ற கருத்தும் தவறு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu