இன்று உலக சைகை மொழி தினம்: இந்திய சர்வதேச மையத்தில் சிறப்பு ஏற்பாடு

பைல் படம்.
International Sign Language Day -சர்வதேச சைகை மொழி தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படும் என ஐ.நா. அறிவித்திருந்தது. காது கேளாதோருக்கு தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைகை மொழி தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 23ம் தேதியான இன்று சைகை மொழி தினத்தை இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கொண்டாடுகிறது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையம் சார்பில் டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விடுதலை அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு சைகை மொழி தினம் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் கொண்டாட மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu