மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக இருந்தார்: ராஜீவ் காந்தி குறித்து ராகுல்
ராஜீவ் காந்தியின் 31வது நினைவு நாளை முன்னிட்டு டெல்லி வீர் பூமியில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 31ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. கடந்த மே-18ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று 21ம் தேதி ராஜீவ்காந்தி நினைவு தினத்தில், எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக அவர் இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் மேலும், என் தந்தை ஒரு இரக்கமுள்ள மனிதர், கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக அவர் இருந்தார். நான் அவரை இழந்து தவிக்கிறேன். அவர் இழப்பினால் மிகவும் வருந்துகிறேன். நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று மனம் திறந்திருக்கிறார்.
என் தந்தை கருணை உள்ளம் கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என் தந்தை. அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது என்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu