/* */

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க பெண் நீதிபதிகள் கோரிக்கை

53 ஆண்டு ஆடைவிதியில் மாற்றம் வேண்டும், நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க பெண் நீதிபதிகள் கோரிக்கை
X

கேரளா உயர்நீதிமன்றம் 

தற்போது பெண் நீதிபதிகள், நீதிமன்றத்தில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற கவுன் அணிந்து பணி புரிந்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆடைமுறை அசௌகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த நீதிமன்றத்தில் இவ்வாறு இறுக்கமாக ஆடை அணிந்து பல மணி நேரம் அமர்ந்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அதிலும் பல சமயங்களில் மின் தடை ஏற்படும்போது வியர்வையில் நனைய வேண்டியுள்ளது என்பது பல பெண் நீதிபதிகளின் மனக்குறை.

இந்நிலையில் கேரள நீதிமன்ற பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள உயர்நீதிமன்ற பதிவாளரை அணுகி, பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான சேலையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த, நீதிபதிகளுக்கான ஆடைவிதியின்படி, பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்திலான பிராந்திய ஆடை, மேலங்கியுடன், வெண்ணிறத்திலான கழுத்துப் பட்டை அணிய வேண்டும். அதேபோல ஆண் நீதிபதிகள், கருப்புநிற 'ஓபன் காலர்' கோட்டு, வெண்ணிற சட்டை, வெள்ளை நிறத்திலான கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணியலாம்.

கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள உயர்நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளதாக தெரிகிறது. அதன்பின்தான், இந்த 53 ஆண்டுகால ஆடைவிதியில் மாற்றம் வருகிறதா என்பது தெரியவரும்.

Updated On: 24 May 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு