மும்பையில் அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்

மும்பையில் அவசரமாக  தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
X
Wind Sheild Crack: விமானத்தின் கண்ணாடியில் விரிசல் காணப்பட்டதை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பையில் தரையிறங்கியது

Windshield Crack:உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மும்பை திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

மே 28 அன்று, ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானம் SG-385 மும்பை-கோரக்பூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டது. பயணத்தின் போது, ​​கண்ணாடியின் வெளிப்புறத்தில் விரிசல் காணப்பட்டது. Windshield Crack: அதனை தொடர்ந்து விமானத்தை மும்பைக்குத் திருப்ப விமானி முடிவு செய்தார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் தெரிவிக்கப்பட்டு, விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!