தமிழர்கள் ஏன் இந்தியில் பேச வேண்டும்?: பாடகர் சோனு நிகம்
பாடகர் சோனு நிகம்
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், 32 மொழிகளில் பாடியவருமான சோனு நிகம், கடந்த வாரம் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ் இடையே நடந்த ட்விட்டர் பரிமாற்றத்தை குறித்து கருத்து கூறுகையில்,
நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அதை திணிக்க முடியாது, ஏனெனில் அந்த மொழி "அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி" என்று குறிப்பிடப்படவில்லை. எனக்கு தெரிந்தவரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி தேசிய மொழியாக கூறப்படவில்லை. இது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது புரிகிறது. அதே சமயத்தில் உலகின் பழமையான மொழி தமிழ் என்பதை அறிந்துள்ளோமா? சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையே ஒரு விவாதம் உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பழமையான மொழி தமிழ் என்று மக்கள் கூறுகிறார்கள் என்று கூறினார்.
எங்கள் நீதிமன்றங்களில் கூட, தீர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று நிகாம் கூறினார்.
நாட்டில் நமக்குப் புதிய பிரச்சனைகள் குறைவாக உள்ளதா? தமிழன், நீ ஹிந்தி பேச வேண்டும் என்று சொல்லி, பிறர் மீது ஒரு மொழியைத் திணித்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறோம். மக்களுக்கு அவர்கள் பேச விரும்பும் மொழியை முடிவு செய்ய உரிமை இருக்க வேண்டும். என்று மேலும் கூறினார்.
சோனு நிகம் தமிழில் ஜீன்ஸ் படத்தில் வாராயோ தோழி என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu