செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்த செல்போன்.. அணையையே காலி செய்த அதிகாரி

செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்த செல்போன்.. அணையையே காலி செய்த அதிகாரி
X

பைல் படம்.

Chhattisgarh News- சட்டீஷ்கரில் தனது செல்போனை எடுப்பதற்காக அணையிலிருந்த நீரை காலி செய்த அதிகாரியால் சர்ச்சை எழுந்துள்ளது.

Chhattisgarh News- சட்டீஷ்கர் மாநிலம், கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபேடா பிளாக்கில் உள்ள உணவு அதிகாரியாக உள்ளவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கெர்கட்டா அணையின் பரல்கோட் நீர்த்தேக்கத்தில் விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது, நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது தற்செயலாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள தனது ஸ்மார்ட்போன் கீழே விழுந்தது. இது 15 அடி ஆழமான நீரைக் கொண்ட அணையின் ஸ்டில்லிங் பேசின் மீது விழுந்தது, உள்ளூர்வாசிகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றனர். முயற்சி தோல்வியடைந்ததால், அந்த அதிகாரி இரண்டு பெரிய 30 ஹெச்பி டீசல் பம்புகளை மூன்று நாட்கள் தொடர்ந்து இயக்கி, 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசனம் செய்யப் போதுமான 21 லட்சம் லிட்டர் தண்ணீரைக் காலி செய்தார்.

Kherkatta reservoir emptied

இந்த நிலையில், தனது விலையுயர்ந்த தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்திலிருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதற்காக சத்தீஸ்கர் உணவு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, துணை கோட்ட அதிகாரி ஆர்.கே.திவார் ஐந்து அடி வரை தண்ணீரை காலி செய்ய வாய்மொழி அனுமதி வழங்கியதாக ராஜேஷ் விஸ்வாஸ் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, இந்திராவதி திட்ட மேற்பார்வை பொறியாளர் கடந்த மே மாதம் 26ம் தேதி துணை கோட்ட அதிகாரி ஆர்.கே.திவாருக்கு, வீணாகும் தண்ணீருக்கான செலவை சம்பளத்தில் இருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார். கோடை காலத்தில் பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் தேவை என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Paralkot Dam, Chhattisgarh food inspector was suspended

இப்பகுதியில் கோடைகாலங்களில் கூட 10 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது. மேலும் விலங்குகள் அடிக்கடி அதை குடித்து வருகின்றன. கால்வாய் மூலம் வரும் தண்ணீரை, அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

the government pulled up his senior, who he said gave him verbal permission to empty water

இதுகுறித்து விஸ்வாஸ் கூறுகையில், தனது தொலைபேசியில் அதிகாரபூர்வ துறை தரவு இருப்பதால் அதனை மீட்டெடுக்க முயற்சித்ததாகவும், அணையின் 10 அடி ஆழத்தில் இருந்தது உள்ளூர்வாசிகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. இரண்டு அல்லது மூன்று அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம் என்று கிராம மக்கள் கூறினர்.

21 lakh litres of water drained from a reservoir to recover his expensive phone

இதனையடுத்து துணை கோட்ட அதிகாரி ஆர்.கே.திவாரை அழைத்து, அருகில் உள்ள கால்வாயில் கொஞ்சம் தண்ணீர் திறந்து விட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். உள்ளூர்வாசிகளின் உதவியைப் பெற்று மூன்றடி நீரை வெளியேற்றி, எனது தொலைபேசியை திரும்பப் பெற்றேன் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்