எங்கடா என்னோட விண்டோ சீட்டு..... அதிர்ச்சியான பயணி

எங்கடா என்னோட விண்டோ சீட்டு..... அதிர்ச்சியான பயணி
X

பயணி பதிவிட்ட போட்டோ.

Where's my window-பயணி ஒருவரிடம் விண்டோ சீட்டுக்கு அதிக பணம் வசூலித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கடைசியில் அவருக்கு சாதாரண இருக்கையை ஒதுக்கியுள்ளது.

Where's my window-இதுகுறித்து பயணி அனிருத் மிட்டல் அவரது பர்சனல் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஹீத்ரோ நகரம் செல்வதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் டிக்கெட் பதிவு செய்தேன். அப்போது விமானம் தரை இறங்கும் போது ஹீத்ரோ நகரின் அழகை ரசித்துக் கொண்டே இறங்க வேண்டும் எனில் விண்டோ சீட்டை பதிவு செய்யுங்கள் என்றும், அதற்கு அதிக பணத்தையும் வசூலித்தனர். நானும் அதிக பணம் செலுத்தி விண்டோ சீட் பதிவு செயதேன். ஆனால், குறிப்பிட்ட நாளில் விமானத்தில் என் சீட்டை பார்த்து அதிர்ந்து போனேன். அது விண்டோ சீட் தான்.... அனால் அங்கு விண்டோ தான் இல்லை.... எங்கே எனது விண்டோ சீட்? என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை டேக் செய்து போட்டோ பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்து இருந்த இன்னொரு பயணி இதுபோன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீநகர் செல்லும் போது இமயமலையின் பனிப்பொழிவு அழகினை பார்த்து ரசிக்க வேண்டும் எனில் விண்டோ சீட்டுக்கு அதிக பணம் செலுத்துங்கள் என வந்தது. நானும் பணம் செலுத்தி விண்டோ சீட் பதிவு செய்தேன்... கடைசியில் என் நிலைமையும் இப்படித்தான் ஆனது என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

இதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai powered agriculture