இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் -பிரதமர்

இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்  -பிரதமர்
X

சென்னையில் 50-வது வெற்றி தினம் கொண்டாட்டம்   

50-வது வெற்றி தினத்தன்று, இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் துணிச்சல் மிக்க இந்திய ராணுவத்தினரின் மகத்தான வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். டாக்காவில் இதற்கான விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மோடி கூறியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

" 50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் துணிச்சல் மிக்க இந்திய ராணுவத்தினரின் மகத்தான வீரத்தையும், தியாகத்தையும் நான் நினைவுகூர்கிறேன். நாம் ஒன்றிணைந்து போராடினோம். அடக்குமுறை சக்திகளை தோற்கடித்தோம். டாக்காவில் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்".

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!