இந்திய விமானப்படையில் சேர வேண்டுமா? முதலில் இதனை படியுங்கள்
இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கு 08.07.2024 முதல் 28.07.2024 இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு 18.10.2024 முதல் நடைபெறும். அக்னிவீர் வாயு தேர்வுக்கு 03 2004 முதல் 03 ஜனவரி 2008-க்குள் பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் Https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். அல்லது தொலைபேசி எண் 9499055912 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். கரூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்விற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu