Vaipadu- வாய்ப்பாடு கணிதத்தின் அரிச்சுவடி மட்டும் அல்ல வாழ்க்கையின் அடிப்படையும் அதுவே
Vaipaduமனித வாழ்வின் அடிப்படையே கணிதம் தான். கணிதம் என்கிற கணக்கு இல்லாமல் வாழ்க்கையே இல்லை. வாழ்க்கையே ஒரு கணக்கு தான் என்று கூட சொல்வார்கள். அத்தகைய கணிதத்தின் அடிப்படையாக இருப்பது தான் வாய்ப்பாடு. வாய்ப்பாடு என்பதற்கு டேபிள் பட்டியல் என்று ஒரு பொருளும் உண்டு.
Vaipaduஆனால் கணிதத்தின் அடிப்படையான வாய்ப்பாடு படிக்காமல் யாரும் பள்ளிப்பருவத்தை தாண்டி இருக்க முடியாது. இன்றளவும் கிராமப்புறங்களில் இருந்து நகரம் வரை கணிதத்தின் அடிப்படையான வாய்ப்பாடு தான் முதலில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் வாய்ப்பாடு இல்லாமல் வகுப்பறை நிறைவடையாது.
Vaipaduஓரிரண்டு இரண்டு, இரண்டிரண்டு நாலு, மூவிரண்டு ஆறு. நாளிரண்டு எட்டு என தொடங்கும் வாய்ப்பாடு தான் பள்ளி படிப்பின் அடிப்படையாக இருந்து வருகிறது .என்னதான் அல்ஜிப்ரா, நவீன கணிதம், கால்குலேட்டர் என எத்தனையோ வந்தாலும் அவை அனைத்திற்கும் அடிப்படை வாய்ப்பாடு தான். அத்தகைய சிறப்புக்குரிய வாய்ப்பாடு பலவிதங்களில் உள்ளது. தமிழ் எழுத்துக்கள் வாய்ப்பாடு ஆங்கில எழுத்துக்கள் வாய்ப்பாடு என பல வாய்ப்பாடுகள் இருக்கின்றன. உலக அளவில் வாய்ப்பாடுகள் வெவ்வேறு விதமாக அந்தந்த நாட்டிற்கு தகுந்தபடி இருந்து வருகிறது நமக்கு தெரிந்த வாய்ப்பாடு கணிதத்தின் அடிப்படையான எண் கணிதத்தின் பெருக்கல் தான்.
Vaipaduஇரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண், திருமணத்தை நிறுத்திய ருசிகர சம்பவமும் நடந்து உள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்ப்போமா? உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணிற்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
Vaipaduமணவறையில் மணமகனும், மணமகளும் அமர்ந்திருக்க புரோகிதர் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். தாலி கட்ட வேண்டியது தான் பாக்கி.இந்த நேரத்தில் மணமகளுக்கு மணமகனின் கல்வி மீது திடீரென சந்தேகம் வந்தது. அவரது கல்வியை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் மந்திரங்கள் ஓதுவதை நிறுத்தச் சொல்லி,இரண்டாம் வாய்ப்பாட்டை படித்து காட்டும்படி கேட்டு இருக்கிறார்.
Vaipaduமாப்பிள்ளையால் இரண்டாம் வாய்ப்பாட்டை சொல்ல முடியாமல் போனது. பின்னர் என்ன மணப்பெண் சந்தேகப்பட்டது உறுதியானதால் திருமணத்தை நிறுத்திவிட்டு வாய்ப்பாடு தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என கூறியபடி மணவறையை விட்டு எழுந்து சென்றுவிட்டார். திருமணமும் நின்று போய்விட்டது.
Vaipaduஎனவே வாய்ப்பாடு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை தான் நமது நாட்டில் இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஆகவே வாய்ப்பாடு கற்றே ஆகவேண்டும். வாய்ப்பாடு தான் கணிதத்தின் அரிச்சுவடி மட்டும் அல்ல. நமது வாழ்க்கையின் அடிப்படையாகவும் உள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu