விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
X

ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள்.

விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் அலமண்டா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.

விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் தடம் புரண்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் விழிநகரம் மாவட்டத்தில் சென்றபோது திடீரென்று தடம் புரண்டது. இந்த பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் விரைந்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் இன்று தடம் புரண்டது என்று கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்தார். இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அக்டோபர் 12 அன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே காமாக்யா நோக்கிச் சென்ற வடகிழக்கு சூப்பர்பாஸ்ட் ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அதேபோல் இந்த மாத தொடக்கத்தில், சென்னையில் உள்ள ஆவடி ரயில் நிலையம் அருகே புறநகர் மின்சார மல்டிபிள் யூனிட் (EMU) ரயிலின் மூன்று காலி பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் சுமார் 12 ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story