காந்தி ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
''தேசத்தந்தை - மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்''
அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் - அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார். 21ம் நூற்றாண்டில் கூட, அவர் ஒடுக்கப்பட்டவர்களின் சாம்பியனாகவும், அடையாளமாகவும் உள்ளார்.
காந்திஜி அவரது அனுபவம் மூலம் வாழ்ந்தார். அவரது வாழ்க்கையே அவருக்கு பாடம் என அவர் கூறினார். அவரது வாழ்க்கை, நிலையான வளர்ச்சி மீதான தத்துவம், பின்தங்கியவர்களின் மேம்பாடு, கிராம சுயராஜ்ஜியத்துக்கான உந்துதல், ஆகியவற்றில் இருந்து நாம் உத்வேகம் பெற முடியும்.
காந்திஜியின் சிந்தனையில் உள்ள இந்த கருத்துக்கள், நவீனகாலத்துக்கும் ஏற்றதாக உள்ளது. அவரது வாழ்க்கை, நாட்டுக்கு தொடர்ந்து கலங்கரை விளக்கமாக இருந்து, நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டுகிறது.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கான நமது பகிரப்பட்ட தேடலில், காந்திஜியின் அகிம்சை கொள்கை, நம்மையும், பிறநாடுகளையும் தொடர்ந்து வழிநடத்தும்.
மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நமது நாட்டு மக்களுக்கு, நான் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!''
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu