ராம நவமி திருநாளில் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் -குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடு
ராம நவமியையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு;
ராம பிரானின் பிறந்த நாள் ராம நவமி தினமாக கொண்டாடப்படும் மங்களகரமான தினத்தில் நாட்டு மக்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரியத்தில் ராம பிரான் நீதி, தைரியம், கருணை ஆகியவற்றின் வடிவமாக சித்தரிக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை, உண்மை, நீதி, பெரியவர்களுக்கு மரியாதை அளித்தல், அனைத்து மனிதர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ஆகிய கொள்கைகளுடன் திகழ்கிறது. 'மரியாதா புருசோத்தமன்' என்று போற்றப்படும் ராம பிரான், சிறந்த மன்னராகவும், பணிவுமிக்க மகனாகவும், அன்பான சகோதராரகவும், உண்மையான உணர்வுடன் முன்மாதிரியாகவும் திகழ்கிறார். ராம பிரானின் வாழ்க்கை அவரது உன்னதமான கொள்கைகளையும், உயர்ந்த ஒழுக்க பண்புகளையும் நாம் பின்பற்றத் தூண்டுகிறது. இந்த ராம நவமி திருநாள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதுடன், பகவான் ராமரால் வலியுறுத்தப்பட்ட நித்திய விழுமியங்களால் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu