குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் காலமானார்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் காலமானார்
X

வருண் சிங்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் காலமானார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி காலமானதாக, விமானப்படை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, டிச.8, ஆம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்ட Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். இந்த கோர விபத்தில், வருண்சிங் தவிர அனைவரும் மரணமடைந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று வருண் சிங்கின் உயிர் பிரிந்ததாக, விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த 14,பேரும் உயிரிழந்தனர்.

பிரதமர் மோடி இரங்கல்

வருண் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருண் சிங் ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூறத்தக்கவை என்று, பிரதமர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil