பவுடர் வடிவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து

பவுடர் வடிவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து
X
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கண்டு பிடித்துள்ளது.

அதன்படி, பவுடர் வடிவிலான இந்த மருந்தினை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். டிஆர்டிஓ மற்றும் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கிய இந்த மருந்து "2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி)" என்று அழைக்கப்படுகிறது. இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு அவசரகால அடிப்படையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து, டிஆர்டிஓ இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் "2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி)" என்ற மருந்தானது கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜன் சார்ந்த நிலையை பெரும் அளவில் குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன", என்று தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2020 மே முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது. மேலும், கொரோனாவிலிருந்து நோயாளிகளை விரைவாக குணப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!