பாதுகாப்பு படைகளில் காலி பணியிடங்கள்: இணையமைச்சர் அஜய் பாட் தகவல்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பாட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
இந்திய ராணுவத்தில் 7, 476 அதிகாரிகள் பணியிடங்களும், 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் பணியிடங்களும், 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன.
பாதுகாப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்கள் பாதுகாப்பு படைகளில் சேருவதை அதிகரிக்க பள்ளி, கல்லூரிகள் மற்றும் என்சிசி முகாம்களில் ஊக்குவிப்பு உரைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu