நாட்டின் மருந்து உற்பத்தி மையமாக மாறி வரும் உத்தரப்பிரதேச மாநிலம்

நாட்டின் மருந்து உற்பத்தி மையமாக மாறி வரும் உத்தரப்பிரதேச மாநிலம்
X

உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

நாட்டின் மருந்து உற்பத்தி மையமாக உத்தரப்பிரதேச மாநிலம் மாறி வருவதாக அம்மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேசம் விரைவில் மருந்து உற்பத்திக்கான மையமாக மாறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு உ.பி முன்னுதாரணமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் முக்கியமான திட்டம்தான் மருத்துவ மைய திட்டம்.

இந்த திட்டத்தின்படி உத்தரப் பிரதேசம் விரைவில் மருந்து உற்பத்திக்கான மையமாக மாறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் மருத்துவ சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டிருக்கின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின்படி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 46 மாவட்டங்களில் உள்ள 81 மருத்துவமனைகளுக்கு தேசிய தர சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

மாநிலத்தில் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக திறன் பெற்ற பிறப்பு உதவியாளர்களை அரசு அதிக அளவில் நியமித்து வருகிறது. தற்போது ஒரு லட்சம் பிரசவங்களில் 167 பேர் வரை உயிரிழக்கின்றனர். இந்த விகிதம் வரும் 2030ம் ஆண்டுக்குள் 70ஆக குறைக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறோம். மேலும் முக்கியமான மருந்துகள் தயாரிக்கும் ஆலைகள் உத்தரப் பிரதேசத்தில் செயல்பட இருக்கின்றன. இப்படியாக உத்தரப் பிரதேசம் விரைவில் மருந்து உற்பத்திக்கான மையமாக மாற்றம் பெறும்" என்று கூறியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!