இந்தியாவில் அலுமினிய ரயில்பெட்டிகளை அறிமுகம் செய்ய ரயில்வே நடவடிக்கை

இந்தியாவில் அலுமினிய ரயில்பெட்டிகளை அறிமுகம் செய்ய ரயில்வே நடவடிக்கை
X

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

இந்திய ரயில்வே அலுமினிய ரயில்பெட்டிகளை அறிமுகம் செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, ரேபரேலி மாடர்ன் ரயில்பெட்டித் தொழிற்சாலை, தென்கொரியாவின் டாவோன்சிஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அலுமினிய பயணிகள் பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து சோதனை செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்திய ரயில்வே 400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில் தொகுதிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்கள் எரிசக்தித் திறன் கொண்டவையாகவும் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளிப்பவையாகவும் இருக்கும் என்று, இந்த ரயில்களில் அலுமினியம் பெட்டிகளை இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மும்பை-அகமதாபாத் அதி விரைவு ரயிலுக்கும் அலுமினிய ரயில்பெட்டிகள் இணைக்கப்படும் வகையில், அவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏற்று மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி