யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த ஸ்ருதி சர்மா
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த ஸ்ருதி சர்மா
UPSC Toppers 2021 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி யூபிஎஸ்சி சிஎஸ்இ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் சில தினங்களிலேயே அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்றது. தேர்ச்சி பெற்றோருக்கான முதன்மைத் தேர்வு, 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியாகின.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வு மே 26 வரை நடைபெற்றது. இந்நிலையில் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று (மே 30ஆம் தேதி) வெளியாகி உள்ளன.
இதில் முதலிடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ்உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்த மாணவி ஸ்ருதி சர்மா. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
UPSC Toppers 2021 தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என ஸ்ருதி சர்மாதெரிவித்துள்ளார்.
இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் என்ற பெண் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தை காமினி சிங்லா என்ற பெண்ணும் 4ஆவது இடத்தை ஐஸ்வர்யா வர்மா என்பவரும் பிடித்துள்ளனர்.
முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu