லஞ்சம் வாங்கிய டி. எஸ்.பி, காவல் உதவி ஆய்வாளராக பதவியிறக்கம்

லஞ்சம் வாங்கிய டி. எஸ்.பி, காவல் உதவி ஆய்வாளராக பதவியிறக்கம்
X

காவல் உதவி ஆய்வாளராக பதவியிறக்கம் செய்யப்பட்ட ஷர்மா

Taking Bribes -உ.பி.யில் 'ஊழல்' செய்த துணை காவல் கண்காணிப்பாளரை பதவியிறக்கம் செய்து முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்

Taking Bribes -பலாத்கார வழக்கை ஒடுக்க லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவரை பதவியிரக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ராம்வீர் யாதவ் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக கடந்த ஆண்டு ஒரு பெண் குற்றம் சாட்டினார், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் அவரது புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. 2021ல் இந்த சம்பவம் நடந்தபோது துணை காவல் கண்காணிப்பாளராக சர்மா இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டார்.

உத்தரபிரதேச நிர்வாகம் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, யாதவ் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது. லஞ்சம் வாங்கியதாக சர்மா மீது விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தகவல் அறியும் .உரிமை சட்ட ஆர்வலர் மூலம் சமர்பித்த வீடியோ ஆதாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது

அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி, டிஎஸ்பி ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்குவதைக் காட்டும் வீடியோவும் அவர்களுக்கு கிடைத்தது, அதன் பிறகு ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் விசாரணை அமைக்கப்பட்டது. லஞ்சம் வாங்கியதில் சர்மா குற்றவாளி என்று அதிகாரி கண்டறிந்தார்.துணை காவல் கண்காணிப்பாளர் வித்யா கிஷோர் ஷர்மா ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோவை அரசாங்கம் கவனத்தில் எடுத்ததையடுத்து அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஷர்மா பதவி இறக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இடைநீக்கத்தில் இருந்தார்.

அரசாங்கத்தின் முடிவைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்து, உ.பி.யின் உள்துறை அமைச்சகம் ட்வீட் செய்தது. டிஎஸ்பி வித்யா கிஷோர் சர்மா, 5 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ அரசாங்கத்திற்கு கிடைத்ததை அடுத்து, அவர் காவல் உதவி ஆய்வாளர் ஆகி விட்டார்.

சர்மா மீண்டும் காவல் ஆய்வாளராக வருவதற்கு குறைந்தது ஏழு வருடங்கள் ஆகலாம். மேலும், பதவி இறக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் டிஎஸ்பி பதவிக்கு வருவது மிகவும் கடினம்.

2021 இல் இந்த சம்பவம் நடந்தபோது ஷர்மா டிஎஸ்பியாக இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மாற்றலாகி சென்று விட்டார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த அதிகாரி காவல் உதவி ஆய்வாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பதவி என்பது குறிப்படத்தக்கது

முதல்வர் ஆதித்யநாத்தின் இந்த அதிரடி உத்தரவு சக போலீஸ் அதிகாரிகள், கீழ்நிலை காவலர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story