திருமணத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரிவால்வர் ரீட்டா
திருமண விழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் மணப்பெண்.
திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 முறை மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத்துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சலேம்பூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மணமகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணமகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் திருமணக் கொண்டாட்டத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் வழக்கமாக உள்ளன. தனது திருமண வைபவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில போலீசார் தேடி வருகின்றனர்.
திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 தடவைகள் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத்துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சலேம்பூர் எனும் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மணமகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
வீடியோவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணமகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வட இந்தியாவில் திருமணக் கொண்டாட்டத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் வழக்கமாக உள்ளன.
எனினும், 2019 ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதங்கள் தடை சட்டம் மூலம் இந்த கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 ஆண்டு சிறை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu