பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியல் வெளியீடு: டில்லி முதலிடம்

பைல் படம்.
Indian City Most Unsafe For Women -நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டில்லிதான் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. டில்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும்.
இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டில்லியில் பங்கு மட்டும் 32.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் டில்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டடுள்ளனர். தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி கற்பழிப்பு ஆகியவை அதிக இடம்பிடித்திருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டில்லிக்கு அடுத்து 2-வது இடத்தில் வர்த்தக தலைநகரான மும்பை உள்ளது. 3-வது இடத்தில் பெங்களூர் உள்ளது. மும்பையில் 5,543 வழக்குகளும், பெங்களூரில் 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu