டெல்லியில் வரலாறு காணாத வெயில் பொதுமக்கள் அவதி

டெல்லியில் வரலாறு காணாத வெயில் பொதுமக்கள் அவதி
X

கடந்த 76 ஆண்டுகளில் டெல்லியில் வெப்ப நிலையில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக தெரிவித்துள்ள வானிலை மையம் கடந்த 1945ஆம் ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் இவ்வளவு அதிக வெப்பம் பதிவானது இதுவே முதல்முறை என கூறியுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதும் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
ai business transformation