தென்மலையில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் 3 வாகனங்கள் 'மிஸ்சிங்'

தென்மலையில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் 3 வாகனங்கள் மிஸ்சிங்
X

தென்மலை பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத கனமழையால் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளநீர் இழுத்து செல்லப்பட்டது.

தமிழக - கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு, தென்மலை பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத கனமழை.

தமிழக - கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு - தென்மலை பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத கனமழை. வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்களை வெள்ளநீர் இழுத்து சென்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம்- கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு மற்றும் புனலூர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் 1992 க்கு பின் கழுதுருட்டி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள எடப்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த வெள்ள நீரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், ஜீப், ஆட்டோ ஆகியவை இழுத்து செல்லப்பட்டது.

இதே போன்று ஆரியங்காவு - புனலூர் வழியாக செல்லும் இருப்பு பாதையில் கல் சரிந்து விழுந்ததால் கொல்லம் நோக்கி சென்ற ரயில் 30 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் தண்டவாளத்தில் கற்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. இதே போன்று தமிழகம் - கேரளா செல்லும் பிரதான சாலைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் ஒட்டியுள்ள கேரளப் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare products