"ஐஏஎஸ் அதிகாரிகளின் 2022 சிவில் பட்டியல்" வெளியிட்டார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

ஐஏஎஸ் அதிகாரிகளின் 2022 சிவில் பட்டியல் வெளியிட்டார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
X

ஐஏஎஸ் அதிகாரிகளின் 2022 சிவில் பட்டியல் இ-புக்கை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்

கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு சிறப்புமிக்க சீர்திருத்தங்களை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டுள்ளது. -ஜிதேந்திர சிங்

ஐஏஎஸ் அதிகாரிகளின் 2022 சிவில் பட்டியல் இ-புக்கை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நேற்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு சிறப்புமிக்க சீர்திருத்தங்களை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறப்பான செயல்பாட்டுக்கான இந்த பட்டியல், சரியான வேலைக்கு சரியான அதிகாரியை தேர்வு செய்ய பெரிதும் உதவும் என்று கூறினார். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை நோக்கிய ஒரு நடவடிக்கை இது என்று அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ஆவணங்களில் அரசிதழ் அதிகாரியின் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற நூற்றாண்டு பழமையான காலனி ஆதிக்க நடைமுறை ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ளது சிவில் பட்டியலின் 67-வது பதிப்பாகும். இ-புக் வடிவில் இரண்டாவது பதிப்பாக இது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அதிகாரிகளின் அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!