ஜம்மு காஷ்மீரில் சாலை நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீரில் சாலை நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
X
ஜம்மு காஷ்மீரில் சாலை நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

ஜம்மு & காஷ்மீரில் உள்ள பல்வேறு NHIDCL (NHIDCL (National Highways and Infrastructure Development Corporation Limited) திட்டங்களின் நிலை குறித்த விவரம் மற்றும் புதுப்பிப்பை, NHIDCL நிர்வாக இயக்குனர் , சஞ்சல் குமாரிடம் , மத்திய அமைச்சரும் உதம்பூர்-கதுவா-தோடா மக்களவைத் தொகுதியின் எம்பியுமான ஜிதேந்திர சிங் கலந்து பேசினார். அதன் பின்னர் அவர்கள் தெரிவித்ததாவது,

கெளனி-கோஹா சாலை தேசிய நெடுஞ்சாலை-244 பணிகள் , தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட தாமதத்தை ஈடுசெய்யும் வகையில், முழுத் திட்டமும் இந்த ஆண்டிற்குள் ஓரளவு மற்றும் அடுத்த ஆண்டுக்குள் ஓரளவும் முடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இரட்டை ஷிப்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நடந்து வரும் NHIDCL திட்டங்கள் ஒவ்வொன்றின் விவரங்களையும் அமைச்சர் மிக நுணுக்கமாக கேட்டு அறிந்ததாகவும், ஒவ்வொரு அம்சத்தின் ஒவ்வொரு சிறிய விவரத்தையும் சுமார் ஒன்றரை மணிநேரம் விவாதித்ததாகவும் சஞ்சல் குமார் கூறினார். கோவிட் தொடர்பான தாமதத்தை விரைவில் ஈடு செய்யும் வகையில் திட்டங்களை துரிதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அமைச்சர் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.

கெளனி-கோஹா திட்டத்தைப் பொறுத்தவரை, டாக்டர் ஜிதேந்திர சிங், திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு ஷிப்டுகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி, தேவையான உத்தரவுகளை உடனடியாக பிறப்பிப்பதாகவும், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடமிருந்து இது தொடர்பாக அதிகபட்ச ஒத்துழைப்பைப் பெற முயற்சிப்பதாகவும் சஞ்சல் குமார் அமைச்சரிடம் உறுதியளித்தார்.

கோஹா-கெல்லானி-கன்னாபால் தேசிய நெடுஞ்சாலை NH-244, செனானி-சுத்மஹாதேவ்-கெல்லானி-சத்தூ-கன்னபால் ஆகியவற்றை இணைக்கும் சாலைப் போக்குவரத்திற்கான மாற்று வழியை வழங்கும். இது பயணத்தை எளிதாக்கும்,மேலும் வருவாயை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் முக்கியமானதாக இருக்கும். . தொற்றுநோய்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி, கோஹா-கெல்லானி சாலையின் முதல் கட்டம் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படலாம், அதே நேரத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ வரையிலான நீட்டிப்பு பிப்ரவரி 2023 க்குள் முடிக்கப்படும்.

இதற்கிடையில், NH-244 இன் செனானி-சுத்மஹாதேவ் சாலைப் பிரிவின் இருவழிப்பாதை ஒரு பெரிய பாலம் தவிர இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். கெளனி-கன்னபால் பிரிவில் இரு திசை சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு, ரூ.76.49 கோடி செலவில் இந்த ஆண்டு அக்டோபருக்குள் முடிக்கப்படும். ஜம்மு மாவட்டத்தில் உள்ள திட்டங்களில், தேசிய நெடுஞ்சாலை-144A இன் ஜம்மு-அக்னூர் பகுதியை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது குறித்த நிலவர அறிகையை NHIDCL நிர்வாக இயக்குனர் அமைச்சரிடம் வழங்கினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய NHIDCL திட்டங்களில் ஜோஜிலா இரு-திசை சுரங்கப்பாதை, Z-Morh சுரங்கப்பாதை, NH-701A இன் பாரமுல்லா-குல்மார்க் பகுதியை மேம்படுத்துதல், NH-244 ஐ இணைக்கும் புதிய இருவழி அனந்த்நாக் பைபாஸ் கட்டுமானம் ஆகியவை அடங்கும் என்று கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!