நாகலாந்து பழங்குடியினருடன் நடனமாடிய மத்திய அமைச்சர்

நாகலாந்து பழங்குடியினருடன் நடனமாடிய மத்திய அமைச்சர்
X

நாகலாந்து பழங்குடியினருடன் நடனமாடிய மத்திய அமைச்சர் எல் முருகன்.

இந்தியாவின் எல்லை கிராமங்கள் இனி இந்தியாவின் கடைசி கிராமங்கள் அல்ல, முதல் கிராமங்கள் என்றார் எல். முருகன்

நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தில் எல்.முருகன் கலந்து கொண்டு நடனமாடினார்.

நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டு களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களாகும். இங்கு மத்திய அரசு சிறப்பு சட்டத்தை அமுல்படுத்தி உள்ளது. அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் இங்கு உள்ள எல்லை பாதுகாப்பு வீரர்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நக்சலைட்டுகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

வளர்ச்சி பெறாத எல்லையோர கிராமங்களில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாகாலாந்தின் பெக் மாவட்டத்தின் இந்திய எல்லையில் அவகுங் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தில் எல்.முருகன் கலந்து கொண்டு நடனமாடினார்.

அங்கு நடந்த விழாவில் பேசிய எல்.முருகன், 'நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள உள்ளடக்கிய வளர்ச்சியால் இந்தியாவின் எல்லை கிராமங்கள் இனி இந்தியாவின் கடைசி கிராமங்கள் அல்ல, முதல் கிராமங்கள்' என கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture