/* */

புயல் எச்சரிக்கை: மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா தயார் நிலையை ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

புயல் எச்சரிக்கை:  மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு
X

மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா

வங்காள விரிகுடாவில் புயல் உருவாகவுள்ளாதாக வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய அமைச்சகங்கள்/முகமைகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் யூனியன் பிரதேச நிர்வாகம் ஆகியவற்றின் தயார்நிலையை மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா இன்று ஆய்வு செய்தார்.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் விதமாக அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கவும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் முகமைகளை மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தினார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மார்ச் 21-ம் தேதிக்குள் சூறாவளிப் புயலாக வலுப்பெறும் என்றும் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 90 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

தேசியப் பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு ஏற்கனவே போர்ட் பிளேயரில் இருக்கும் நிலையில், தேவைப்பட்டால் கூடுதல் குழுக்கள் விமானம் மூலம் செல்லத் தயாராக உள்ளன. போதுமான அளவு அவசரகாலப் பொருட்களுடன் அந்தமான் & நிக்கோபார் நிர்வாகம் தயாராக உள்ளது. மக்களைப் பாதுகாக்கவும், உள்கட்டமைப்பை விரைந்து சீர்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Updated On: 17 March 2022 2:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...