மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி காலமானார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி காலமானார்
X

உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சகோதரி ராஜேஸ்வரி பென் ஷா சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

தனது சகோதரியின் மரணத்தைத் தொடர்ந்து குஜராத்தில் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் அமித் ஷா ரத்து செய்துள்ளார்.

அவரது உடல் இன்று அதிகாலை அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பாஜக ஆதரவாளர்களுடன் மகர சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாட அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை முதல் அகமதாபாத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பனஸ்கந்தா மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. பனஸ்கந்தாவில், தியோதார் கிராமத்தில் பனாஸ் பால் பண்ணையின் பல்வேறு திட்டங்களை அமைச்சர் தொடங்கி வைக்க இருந்தார். காந்திநகரில், ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் ஷா திட்டங்களை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது மூத்த சகோரி உயிரிப்பு காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் அமித் ஷா ரத்து செய்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare products