மத்திய பட்ஜெட் 2022-23: உங்கள் யோசனைகளை ஆன்லைன் மூலம் தெரிவிப்பது எப்படி?

மத்திய பட்ஜெட் 2022-23: உங்கள் யோசனைகளை ஆன்லைன் மூலம் தெரிவிப்பது எப்படி?
X
மத்திய பட்ஜெட் 2022-23க்கான உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆன்லைன் மூலம் தெரிவிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

நாட்டின் வருடாந்திர பட்ஜெட் அறிக்கையை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்திற்கு முன் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்க செய்ய வேண்டும். அதன்படி, பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதனை தற்போதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

இந்த பட்ஜெட்டுக்கான மக்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆன்லைன் மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம். அதன்படி 'MyGovt' இணையதளமான https://auth.mygov.in/ என்ற முகரியில் சென்று உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.


தெரிவிக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் சென்று மொபைல் எண் அல்லது இமெயில் முகவரியை டைப் செய்து உங்களுக்கு வரும் ஓடிபி மூலம் உள் நுழையவும்.


பின்னர் உங்களுடைய முழு விபரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.


இதனைத்தொடர்ந்து https://www.mygov.in/group-issue/inviting-ideas-and-suggestions-union-budget-2022-2023/ என்ற முகவரியில் சென்று பட்ஜெட் குறித்த உங்களுடைய யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை டைப் செய்து அனுப்ப வேண்டும். இதனையடுத்து தங்களது கருத்து பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கும்.


இது வரும் ஜனவரி 7ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself